கனடாவில் காணாமல் போன 21 வயது இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான Davinia McKinney கடந்த 28ஆம் திகதி கடைசியாக எட்மண்டனின் மேற்கு முனையிலுள்ள பெல்மீட் சுற்றுப்புறப் பகுதியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.
McKinney, வீட்டிலிருந்து வெளியே சென்ற போது எட்மண்டனில் கடுமையான குளிர் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வேளை, அவர் வானிலைக்கு ஏற்றவாறு ஆடை அணியவில்லை என்றும், அவரது பணப்பை, செல்போனை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
McKinney காணாமல் போன சமயத்தில் அப்பகுதியில் குளிர் காற்று -35 C ஆக இருந்தது. இந்த நிலையில் ஞாயிறன்று McKinney சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில், அவரது மரணத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என பொலிஸார் கருதுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Reported by : Sisil.L