கனடாவின் அடுத்த பாதுகாப்பு அமைச்சராக தமிழ்ப் பெண்ணான அனிதா ஆனந்த் தெரிவு செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த கனேடிய பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ.
லிபரல் கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றார். அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அனிதா ஆனந்த் 14,511 வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். அவர் பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் முன்னாள் அமைச்சர் ஆவார்.
இந்த நிலையில் தற்போதைய புதிய அமைச்சரவையில் அனிதாவை பாதுகாப்பு அமைச்சராக ஆக்க ஜஸ்டின் ட்ரூடோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெண் ஒருவரை இந்த பதவிக்கு ட்ரூடோ நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அனிதாவின் பெயரே இதில் முன்னணியில் உள்ளது.
முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த ஒரே பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
———————–
Reported by : Sisil.L