கனடாவின் பாரிய ஒன்றாரியோ Barrie, Ont பகுதியை தாக்கிய சுழல்காற்று காரணமாக ஐந்து கிலோமீற்றருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 210 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர் என பாரியின் மேயர் ஜெவ் லெஹ்மன் தெரிவித்துள்ளார்.நால்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 25 வீடுகள் சேதமடைந்துள்ளன என மேயர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுழல் காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மக்கள் ஆரம்பித்துள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கையை சமூகத்தின் ஏனையவர்கள் ஆரம்பித்துள்ளனர் என மேயர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் பெரி மக்களுக்கு வழமையான ஒன்று எனத் தெரிவித்துள்ள மேயர் 1985 இல் எட்டு பேர் உயிரிழந்ததை நினைவுபடுத்தியுள்ளார்.1985 இல் அருகில் உள்ள அலன்டேலில் 100 வீடுகள் சேதமடைந்துள்ளன.
1985ஆம் ஆண்டை நினைவுபடுத்தும் விதத்தில் இன்றைய சம்பவங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவித்துள்ள மேயர் நான் அவ்வேளை சிறுவனாக இருந்தேன். அது அதிர்ச்சியளிக்கும் அனுபவம் மீண்டும் நிகழக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
—————–
Reported by : Sisil.L