கடை ஒன்றை சேதப்படுத்தி, அதன் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் – கல்வியன்காடு பகுதியில் அமைந்துள்ள கடை ஒன்றை சேதப்படுத்தி, அதன் உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்று (18) இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. 

உரிமையாளர் கடையை மூடுவதற்கு தயாரான நேரத்தில் வாள்  மற்றும் பொல்லுகளுடன் 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

கடை உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், கடையிலிருந்து 5 இலட்சம்  ரூபா பணத்தையும் அந்த குழு கொள்ளையிட்டு சென்றுள்ளது.  

வெட்டுக் காயங்களுக்குள்ளான  கடை உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். 

Reported By :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *