நாட்டின் முன்னணி எரிவாயு விநியோக நிறுவனமான லிட்ரோ நிறுவனம் தற்போது எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் மாதத்துக்கான அத்தியாவசிய எரிவாயுக் கையிருப்பு எதுவும் விண்ணப்பம் செய்யப்படாததன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக ஒரு மாதத்துக்கான இருப்புகளை முந்தைய மாதம் 10 ஆம் திகதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். ஆனால் இதுவரை லிட்ரோ நிறுவனத்தால் மார்ச் மாதத்துக்கான முழு விண்ணப்பத்தையும் செய்ய முடியவில்லை.
நிறுவன வட்டாரங்களின்படி, நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு தவிர்க்க முடியாதது.
மேலும், டொலர் தட்டுப்பாடு காரணமாக, கடந்த நான்கு நாட்களாக எரிவாயுக் கப்பல்களுக்கு பணம் செலுத்தாததால், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதால், நிறுவனம் பல நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
————-
Reported by : Sisil.L