சமையல் எரிவாயு சிலிண்டர்களை உள்நாட்டுச் சந்தையில் வாங்க முடியாததால் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். கடவத்தைப் பகுதியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு சிலிண்டர் கடைகளுக்கு அருகில் நீண்ட வரிசையில் இன்று காலை பொதுமக்கள் காத்திருந்தனர்.லொறி ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றி வரப்படும் என்ற செய்தியை அறிந்து நீண்ட நாட்களாக சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ளாதிருந்த பெரும்பாலான மக்கள் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு காத்து நின்றனர்.
————————-
Reported by : Sisil.L