தொழில் பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மகிந்த ஜயசிங்க இன்று (22) குறித்த அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இந்நிகழ்வில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க,
“இந் நாட்டு மக்கள் எங்களிடம் எதிர்பார்க்கும் வளமான நாடு, அழகான வாழ்க்கை, அந்த செயல்முறைக்கு ஏற்றவாறு, தொழில் அமைச்சர், பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவுடன் இணைந்து, அமைச்சின் ஊழியர்களுடன் கைகோர்த்து, தொழிற்சங்கங்களுடன் இணைந்து பணியாற்றி. இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கான நட்பு மற்றும் புரிந்துணர்வுடன் ஒரு நல்ல நாட்டை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.
நாங்கள் இந்த அரசியலில் ஈடுபடுவது தனிப்பட்ட இலாபத்திற்காக அல்ல.
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கையை வழங்குவதே எமது இலக்காக உள்ளது” என்றார்.