கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி இந்திய உயர் நீதிமன்றில் பொது நல மனு தாக்கல்

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட  பொது நல மனுவை இந்திய உயர்  நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி மதுரையை சேர்ந்த K.K.ரமேஷினால்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த பொது நல வழக்கினை உயர் நீதிமன்ற நீதியரசர்  ஹேமந்த் குப்தா தலைமையிலான குழுவினர் விசாரணக்கு எடுத்துக்கொண்டனர்.

இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கச்சத்தீவு தொடர்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம்  தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளதாக  நீதியரசர் இதன் போது  சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,  ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் குறித்த  மனுவையும் இணைத்துக்கொள்ளுமாறு நீதியரசர்  உத்தரவிட்டுள்ளார்.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *