தொற்று நோயால் மரணித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டமாவடிப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி கொவிட் தொற்றால் உயிரிழந்த 1001 பேர் ஓட்டமாவடிப் பகுதியில் இதுவரை புதைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய அரசினால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பெரும் தனிமைப்படுத்தல் பிரதேசமான மட்டக்களப்பு, ஓட்டமாவடியின் பல பகுதிகளில் சடலங்கள் இவ்வாறு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
—————
Reported by : Sisil.L