ஒரு முட்டை 60 ரூபா; ஒரு முட்டை அப்பம்  120 ரூபா

பலரும் விரும்பிச் சாப்பிடும் முட்டை அப்பங்களின் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

 
புறநகர் பகுதிகளில் 50 முதல் 60 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை அப்பம் தற்போது சாதாரண உணவகங்களில் 120 முதல் 130 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.


முட்டை அப்பங்களின் விலை உயர்வு தொடர்பாக உணவக உரிமையாளர்கள் கருத்து தெரிவிக்கையில்:-
முட்டை விலை 60 முதல் 65 ரூபா வரை உயர்ந்துள்ளது. மேலும் எரிவாயு விலை உயர்ந்துள்ளதாலும், முட்டை அப்பத்தின் விலை அதிகரித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
—————
Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *