ஒரு டொலர் 450 ரூபா வரை செல்லும் : பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் அமெரிக்க டொலர் 450 ரூபாவை நெருங்குவதைத் தடுக்க முடியாது என இலங்கை வடமேல் பல்கலைக்கழகத்தின் வர்த்தக கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.


பொருளாதார நெருக்கடிக்கான காரணத்தையும் பிரச்சினையின் அளவையும் அரசாங்கம் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.


அரசாங்கத்தின் சில தவறான முடிவுகளால் நிதி ஒழுக்கம் சீர்குலைந்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் அரசாங்க வருவாயும் 25% குறைக்கப்பட்டது.


இதை முதலில் பார்த்தபோது செலவு பக்கத்தைக் குறைக்க வேண்டும் என்று சொன்னோம். எனினும் அரசாங்கம் அரசியல் பிரசாரத்துடன் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்தது. வருமானத்துக்குப் பதிலாக செலவுகள் அதிகரித்த போது கடன் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் தற்போது கடன் தராத நிலை ஏற்பட்டுள்ளது. இலகுவாக அரசாங்கம்  பணத்தை அச்சடிப்பதைத் தொடர்ந்தது.


இதனால் டொலர் மதிப்பு உயர்கிறது. இந்த அரசாங்கம் வந்ததும் 180 ரூபாவாக இருந்த டொலரைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சித்தது. டொலரை நெகிழ்வாக வைத்திருக்கச் சொன்னோம். ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சொன்னதைக் கேட்டிருந்தால், இன்று 230 ரூபாவுடன் டொலரை நிறுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.
——————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *