ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சி- பந்துல

புத்தாண்டுக் காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாய்க்கு விற்க அரிசி ஆலை உரிமையாளர்கள் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை அரிசி ஆலை உரிமையாளர்கள் புத்தாண்டுக் காலத்தில் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே அரிசியை இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்படும் அரிசியானது சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக நுகர்வோருக்கு உத்தரவாத விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்தில் அரிசியின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும், மக்களுக்குச் சலுகை விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Reported by : Sisil.L



————————————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *