ஒன்றாரியோவில் ஜக்பொட் பரிசாக 60 மில்லியன் தொகையை வென்றெடுத்த பெண்

ஒன்றாரியோ மாகாணத்தின் ஹமில்டனில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் 60 மில்லியன் டொலர் ஜக்பொட் பரிசை வென்றுள்ளார்.


லியா முராடோ கிரேஸியஸ் என்ற பெண்ணே இவ்வாறு பெரும் பணத் தொகையை பரிசாக வென்றெடுத்துள்ளார்.
லொட்டோ ஜக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் குறித்த பெண் பரிசு வென்றுள்ளார்.


கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சீட்டிழுப்பில் குறித்த பெண்ணுக்கு இந்தப் பரிசுத் தொகை கிடைக்கப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒன்லைன் மூலம் 5 டொலர் செலுத்தி லொத்தர் சீட்டை குறித்த பெண் கொள்வனவு செய்துள்ளார் எனவும், இணையத்தில் கொள்வனவு செய்யப்பட்ட டிக்கட் ஒன்றுக்கு கிடைக்கப் பெற்ற மிகப் பெரிய பரிசுத் தொகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


பரிசு வென்றமை குறித்து லொத்தர் சீட்டு நிறுவனம் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைத்த போதிலும் கிரேஸியஸ் அதனை உடனடியாக பார்க்கவில்லை.


பின்னர் பரிசுத் தொகை குறித்து அறிந்து கொண்ட போது அளவில்லா மகிழ்ச்சி அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
————
Reported by: Anthonippillai.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *