ஒன்ராறியோவில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 784 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்தத் தொற்றாளர்களில் முழுமையாக தடுப்பூசி பெறாத அல்லது தடுப்பூசியின் நிலை தெரியாத நபர்கள் 602 பேர் உள்ளனர்.சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட நாளாந்த மாகாண கொவிட் குறித்த புள்ளி விபரங்கள் வருமாறு:
சோதனைகள் நிறைவு : 23,625 மாகாண அளவிலான சோதனை நேர்மறை வீதம் : 3.2 சதவீதம்
சிகிச்சையில் உள்ள தொற்றாளர்கள் : 6,249 கொவிட்- 19 தொடர்பான நோய்களால் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் : 184 – சுவாசிக்க வெண்டிலேட்டர் தேவைப்படுவோர் : 107
மரணங்கள் : 6 இதன்படி அதிகாரபூர்வ இறப்பு எண்ணிக்கை : 9,611 தடுப்பூசிகள் : ஞாயிறு வரை 21,167,527. அதாவது 12 வயதுக்கு மேற்பட்ட ஒன்டேரியர்களில் 84.3 சதவீதமானோர் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்றுள்ள அதேவேளை 78 சதவீதமானோர் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L