ஐரோப்பியத் தலைவர்களுக்கு முக்கிய வேண்டுகோள் விடுத்த கனேடியப் பிரதமர்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜனநாயக நாடுகளாக ஒன்றிணையுமாறு ஐரோப்பியத் தலைவர்களுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடந்த 30 நாட்களாக உக்ரைனில் நீடித்து வரும் போர் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதிகரித்து வரும் உலகப் பணவீக்க விகிதம், கனடாவில் மூன்று தசாப்த கால உயர்வை எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தொடர்பிலும் உரிய முடிவெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


மேலும், உக்ரைன் கோதுமையின் முக்கிய ஏற்றுமதியாளராக இருப்பதால், இது உலகளாவிய உணவு விலையை உயர்த்தியுள்ளது என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.


மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்களையும் போருக்குத் தேவையான உதவிகளையும் அனுப்ப வேண்டும் எனவும், ரஷ்யா மற்றும் பெலாரஸில் உள்ள புட்டின் மற்றும் அவருக்கு உதவுபவர்கள் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் இறுக்க வேண்டும் எனவும் ட்ரூடோ கோரிக்கை விடுத்தார். 


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *