ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வை.கோபால்சாமி தெரிவித்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுகின்றபோது, இந்தியா ஆதரவாக செயற்பட வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சர்வதேச குற்றவியல் மன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை  மனித உரிமை பேரவையில் கொண்டு வருவதற்கு  இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள  தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில், இந்தியா தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என வை.கோபால்சாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக The Hindu ளெியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *