எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலுக்குத் தேவையான நிதி பெற்றுக்கொடுக்கப்படுமாயின், உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.
ஏப்ரல் 25 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்கெடுப்பை நடத்த வேண்டுமாயின், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் தபால் வாக்குச்சீட்டுகளை அரச அச்சகத்தில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்த முடியாது என்பது குறித்து இதுவரை தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தினத்தை மாற்றியமைப்பது தொடர்பில் எதிர்வரும் 10 ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
இதனிடையே, தேர்தலுக்கு அவசியமான நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில், உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் கலந்துரையாடலொன்றைக் கோரியுள்ள போதிலும், அதற்கான தினம் இதுவரை வழங்கப்படவில்லை என அவர் கூறினார்.
பிரதமருடனான கலந்துரையாடலுக்கு தினமொன்று வழங்கப்படும் என தான் எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
Reported by :Maria.S