ஏப்ரலில் தேங்காய் எண்ணெயின் விலையை அதிகரிக்கத் திட்டம்

எதிர்வரும் புத்தாண்டுக் காலத்தில் தேங்காய் எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலையை அதிகரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சிப்பதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


பாரிய அளவிலான நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் இருப்புக்களை மறைக்கும் திட்டத்தை செயற்படுத்தியுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.


பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் கள் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான 100 % எண்ணெயை உற்பத்தி செய்வதாக சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான புத்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


உள்ளூர் சுத்திகரிப்பு நிலையங்கள் மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் இருப்புகளை தங்களுடைய சேமிப்புக் கிடங்குகளில் மறைத்து வைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


பன்னாட்டு நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய்க்கான வரிசையை உருவாக்க முயற்சிப்பதாகவும் பொது மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்துவதாகவும் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் கள் தமது உற்பத்தியை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்குவதற்கு உரிய அதிகாரிகளின் ஆதரவை வழங்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *