சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பானது, அரசாங்கத்தின் தோல்வி, இயலாமை மற்றும் தவறான நிர்வாகத்தை எடுத்துக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஜெயமஹவிடம் கேள்வி எழுப்பிய போது, எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதுடன் பொதுமக்களுக்குத் தெரியாமல் எரிவாயுவின் அளவு குறைந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
பொது மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் நிற்பதுடன், 10,000 ரூபாவிற்குக் கூட வாங்க முடியவில்லை.
அரசாங்கத்தின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைக் கணிப்பதற்கு கொவிட் -19 தொற்றுநோய் தணிந்தவுடன் ஒரு தேர்தலை நடத்த வேண்டும்.
எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தவிர, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் பற்றாக்குறையும் எதிர்காலத்தில் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
—————-
Reported by : Sisil.L