எரிவாயு தட்டுப்பாடு காரணமாக ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதால், நுகர்வோர் உணவு வாங்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
சாப்பாடு வாங்க பல கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
திறந்திருக்கும் கடைகளில் கூட போதிய உணவு கிடைக்காததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதனால், நுகர்வோர் உடனடி நூடுல்ஸ் சாப்பிட்டு நாளைக் கழிக்க வேண்டியுள்ளது என்கின்றனர்.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ‘கேஸ் இல்லை, கடை மூடப்பட்டுள்ளது’ என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
————-
Reported by : Sisil.L