நிதியமைச்சர் நிவாரணம் அல்லது விலை சலுகையை வழங்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
லங்கா ஐஓசி ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 15 ரூபாவாலும் ஒரு லீற்றர் டீசலின் விலையை 25 ரூபாவாலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் விலை உயர்வைக் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்த அவர், இறுதித் தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
————–
Reported by : Sisil.L