எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் பொருட்கள் மற்றும் சேவைகளை நடத்தும் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் காரணமாகவே இதுபோன்ற பரிந்துரையை செய்ய வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் வரி வருமானம் குறைவாக இருப்பதாகவும், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டால், அரசாங்க வருமானத்தை அதிகரிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
—————–
Reported By:Anthonippillai R