மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், அடுத்த வாரம் முதல் தினமும் 10 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம் முற்றாக நேற்று மூடப்பட்டதுடன் இன்று முதல் பல பகுதிகளில் 10 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தேவையான அளவு எரிபொருளை விநியோகிக்கத் தவறினால் அடுத்த வாரம் முதல் 10 மணித்தியாலங்களுக்கு மேல் மின்சார விநியோகத்தை துண்டிக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வாரத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், எனவே இன்று முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும், அவசரகால கையிருப்பு கிடைக்காவிட்டால் நேரம் மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
——————
Reported by : Sisil.L