நாட்டுக்கு எரிபொருளைக் கொண்டு வர அரசாங்கத்தால் முடியாமையால் நாட்டை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஊடாக நாட்டை முடக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தி அதற்கு இடமளிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் திறமையற்ற பண முகாமைத்துவத்தினால் பெற்றோலியத்தைக் கொண்டு வர முடியவில்லை எனவும் அதனால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Reported by : Sisil.L