கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயார் கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் என நாட்டின் துணைப் பிரதமர் கூறியுள்ளார்.
நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணமான கியூபெக்கில், மொழி என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. ஏனெனில் இங்கு பிரெஞ்சு பேசுபவர்களே அதிகம். ஆனாலும் அங்கு ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகம் இருந்தது பிரிவினைவாத இயக்கம் கியூபெகோயிஸின் (PQ) எழுச்சிக்கு உதவியது.
ஏற்கனவே எயார் கனடா விமான நிறுவனம் அதிகாரபூர்வமாக இரு மொழிகளுக்கு அங்கீகாரம் கொடுத்துள்ள போதிலும், கனடாவின் இரண்டாவது மொழியான பிரெஞ்சு மொழியைப் பேசத் தேவையில்லை என எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரி Michael Rousseau கூறியிருந்தார்.
இதன் பின்னர் தான் இப்படி கூறியதற்கு மன்னிப்புக் கேட்ட Michael, தனது பிரெஞ்சு திறன்களை மேம்படுத்துவதாக அண்மையில் உறுதியளித்தார்.
இந்த நிலையில் தான் கனடாவின் துணைப் பிரதமர் Chrystia Freelan, எயார் கனடாவின் தலைமை நிர்வாக அதிகாரி பிரெஞ்சு மொழியை நன்றாக கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பிரஞ்சு பேசக் கற்றுக்கொள்வது எயார் கனடா தலைமை நிர்வாக அதிகாரி Michaelன் செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Reported by : Sisil.L