களனிதிஸ்ஸ தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திரம் ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று மின்வெட்டு ஏற்படவில்லையென்றாலும், எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது என உறுதியாக கூற முடியாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனல்மின் நிலையம் திடீரென சரிந்ததன் காரணமாக தேசிய மின் உற்பத்திக்கு 163 மெகாவாட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், நாட்டின் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை நாட்டில் மின்வெட்டு இருக்காது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நிலக்கரி கொள்வனவுக்கான நிதியையும் திறைசேரி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று(13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
——————–
Reported by : Sisil.L