பொது இடங்களுக்கு குறிப்பாக கடைகள் மற்றும் உணவகங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆலோசிக்க கொவிட் -19 தடுப்பு செயலணி தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 தடுப்புச் சட்ட விதிகளின்படி தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது தொடர்பாக சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணொளி தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் குழு நேற்று கூடிய கூட்டத்தில் இது தொடர்பில் ஆராயப்பட்டது.
மேலும், கிராமப் புறங்களில் தடுப்பூசி செயல்முறையை நிறைவு செய்ய நடமாடும் தடுப்பூசி வாகனத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தடுப்பூசி செயல்திறன் மற்றும் தடுப்பூசி செயல்முறை தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
——–
Reported by : Sisil.L