அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்-1 பி’ விசா வழங்கி வருகிறது.
இந்த விசாவை உலக நாடுகளில் அதிகளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகிற தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் ‘எச்-1 பி’ விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் அந்த விசாவைப் பெற இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பல சிக்கல்களை எதிர்கொண்டனர். எனினும் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு ‘எச்-1 பி’ விசா தொடர்பாக முந்தைய நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தினார். இதன் மூலம் ‘எச்-1 பி’ விசா பெறும் நடைமுறை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
இந்த நிலையில் 2023 ஆம் நிதியாண்டில் ‘எச்-1 பி’ விசாவைப் பெறுவதற்கான முன்பதிவு வருகிற மார்ச் 1ஆம் திகதி தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அறிவித்துள்ளது. வெற்றி பெறும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் விபரங்கள் மார்ச் 31ஆம் திகதி இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L