எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தத்தின் பின் 150 கடல் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளன

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பின் இதுவரை சுமார் 150 கடல் ஆமைகளும் 15 டொல்பின்களும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இவ்வாறு இறந்த கடல் ஆமைகளின் உடலங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

 இந்தக் கடல் உயிரினங்களின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
இதேவேளை இறந்த மற்றொரு கடல் ஆமை இன்று மொரட்டுவையிலுள்ள கொரலவெல்ல கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது.
—————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *