உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாளை (01) விவாதம்: பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக்குழு தீர்மானம்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நாளை (01) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை விவாதத்தை நடத்த பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமைக்கான சபை நடவடிக்கைகளை எதிர்வரும் 07 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நடத்தவும் பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பான தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு தற்போது கூடியுள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

Reported by :S.Kumara

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *