எண்களைக் கொண்டு புதிர்களை அமைக்கும் கணித விளையாட்டுகளை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யூலர் 18-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார். அதில் இருந்து பல விதமான எண்கள் விளையாட்டுகளை பலரும் உருவாக்கினார்கள். இந்நிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மகி காஜி என்பவர் ‘சுடோக்கு’ என்ற புதிய விளையாட்டைக் கண்டுபிடித்தார். அவர் கண்டுபிடித்த சுடோக்கு 1986-ம் ஆண்டு பத்திரிகைகளில் வெளிவந்தது. அது பின்னர் உலகம் முழுவதும் பிரபலமாக மாறியது. சுடோக்கு விளையாட்டை இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் விளையாடி வருகிறார்கள். இதைக் கண்டுபிடித்த மகி காஜி மரணமடைந்துள்ளார்.
அவருக்கு 69 வயது. கடந்த 10 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
Reported by : Sisil.L