உரப்பிரச்சினைக்குத் தீர்வு கோரி முல்லைத்தீவு – முள்ளியவளை கமநலசேவைகள் நிலையத்திற்கு முன்பாக நேற்று விவசாயிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் “உரமின்றி உழவு இல்லை, அரசே விவசாயத் துறையைக் காப்பாற்று, விவசாயம் எமது உயிர்மூச்சு, உரத்தைத் தடைசெய்து எமது உழைப்பை அழிக்காதே” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோருடன் விவசாயிகள் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
————–
Reported by : Sisil.L