ரஷ்யா- உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வந்து சமாதானம் நிலவுவதற்காக பாப்பரசர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.
வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் இந்த சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயர்கள், பாதிரியார்கள் மற்றும் பொதுமக்கள் என 3,500 பேர் கலந்து கொண்டனர்.
பிரார்த்தனையின் போது பேசிய போப் பிரான்சிஸ், கடந்த நூற்றாண்டில் நடந்த 2 உலகப் போர்கள் தந்த கசப்பான அனுபவங்களை மனித குலம் மறந்து விட்டதாகக் கூறினார்.
இந்த சிறப்பு பிரார்த்தனை 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. அதேபோல் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் உள்ளூர் மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேலும் வத்திக்கானில் நடந்த பிரார்த்தனையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் தூதர்கள் பங்கேற்ற போதும், அவர்கள் அரங்கத்தில் எதிரெதிரே அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை உக்ரைன் மீதான போரை ரஷ்யா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
——————
Reported by : Sisil.L