உக்ரைன் செல்லத் தயாராகும் மூவாயிரம் அமெரிக்கர்கள்

ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்புப் படையில் சேர வெளிநாட்டினருக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  அழைப்பு விடுத்து வருகிறார்.


இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷ்ய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.


இவ்வாறு விருப்பம் தெரிவித்தவர்களில் பெரும்பாலானோர் ஈராக், பொஸ்னியா ஆகிய நாடுகளில் போர் முனையில் சண்டையிட்ட அனுபவமுடையவர்கள் எனக் கூறப்படுகிறது.


இதேவேளை அமெரிக்காவைத் தவிர, ஜோர்ஜியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் உக்ரைனின் சர்வதேச பாதுகாப்புப் படையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

———————  

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *