கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதன்படி உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகன்றன. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்று காலை ரஷ்யாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்து பயங்கர தாக்குதலை நடத்தின.
இந்நிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.
கப்பல் கட்டும் தொழிற்சாலைகள் , துறைமுகங்கள் நிறைந்த கெர்சன் உக்ரைன் நாட்டின் முக்கிய தொழில் நகரமாகும்.
சுமார் 3 லட்சம் மக்கள் தொகையுடைய கெர்சன் நகரில் 20 சதவீத ரஷ்ய நாட்டினர் வசித்து வருகின்றனர்.
Reported by : Sisil.L