திடீரென உக்ரைன் சென்று இறங்கிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அங்கு ரஷ்ய தாக்குதலுக்குள்ளான பொதுமக்களின் வீடுகளின் நிலை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
ரஷ்ய தாக்குதலில் கடும் பாதிப்புக்குள்ளான உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகிலிருக்கும் Irpin நகருக்கு நேற்று திடீர் விஜயம் புரிந்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நகர மேயரான Oleksandr Markushynஐயும் சந்தித்துள்ளார்.
ரஷ்யப் படைகளின் தாக்குதலில் சேதமடைந்த பொதுமக்களுடைய வீடுகளின் நிலை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானதாக Oleksandr தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியை உறுதி செய்துள்ள கனேடிய பிரதமர் அலுவலகம், ட்ரூடோ உக்ரைன் ஜனாதிபதியான விலோடிமிர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்க இருப்பதாகவும், உக்ரைன் மக்களுக்கு கனடாவின் உறுதியான ஆதரவைத் தெரிவிக்க இருப்பதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
Reported by : Sisil.L