இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10ஆவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று(14) நடைபெறுகின்றது.
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நவம்பர் 14 திகதி தேர்தல் தினமாக குறிப்பிட்டு வர்த்தமானி வௌியிடப்பட்டது.
அதற்கமைய இன்றைய நாளில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.
இன்று(14) காலை 07 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்களிப்பு பிற்பகல் 04 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கை பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேர்தல் ஊடாக 196 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இம்முறை வாக்களிக்க 171,40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
22 தேர்தல் மாவட்டங்களில் 13 ஆயிரத்திற்கும் அதிக வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நமது நிருபர்