இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது: ஐக்கிய மக்கள் சக்தி

ஜனநாயக நெருக்கடி, நல்லாட்சி இன்மை, நீதித்துறையின் நடவடிக்கைகளில் தலையிடுதல் போன்ற பாரதூரமான பிரச்சினைகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.


ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை  இலங்கை இழந்தால் எதிர்காலத்தில் நாடு வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.


நிலைமையை மதிப்பிடுவதற்காகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *