இலங்கை – கட்டார் மத்திய வங்கி ஆளுநர்கள் சந்திப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் கட்டார் மத்திய வங்கியின் ஆளுநர் ஷேக் அப்துல்லா பின் சவூத் அல்-தானி ஆகியோருக்கிடையே முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

 
டோஹா நகரில் அமைந்துள்ள கட்டார் மத்திய வங்கியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கொரோனாத் தாக்கங்களில் இருந்து உரிய பொருளாதாரங்களைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் இலங்கை – கட்டார் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை மத்திய வங்கிக்கும் கட்டார் மத்திய வங்கிக்கும் இடையிலான ஒத்துழைப்பு மீதான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *