இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 41 மரணங்கள் பதிவாகியுள்ளன.நேற்று முன்தினம் இந்த மரணங்கள் இடம்பெற்றுள்ளன என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.மரணித்தோரில் 18 பெண்களும், 23 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களில் 28 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.
இதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 574 ஆக உயர்வடைந்துள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
————–
Reported by : Sisil.L