இலங்கையில் மேலும் 40 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 22 ஆண்களும் 18 பெண்களும் அடங்குகின்றனர். அதற்கமைய 30 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 8 ஆண்களும் 3 பெண்களும் அடங்கலாக 11 பேர் மரணித்துள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட 28 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில் 14 ஆண்களும், 14 பெண்களும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
———–
Reported by : Sisil.L