நாட்டில் நேற்று முன்தினம் 195 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் நேற்றிரவு விடுத்துள்ளஅறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய, நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,985ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 98 ஆண்களும் 97 பெண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
——————-
Reported by : Sisil.L