நாட்டில் நேற்று முன்தினம் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 156 பேர் உயிரிழந்தனர் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டது.அண்மை நாட்களாக கொரோனா மரணங்கள் 100ஐ கடந்து வந்தன. இந்த நிலையில் திடீர் அதிகரிப்பாக 150ஐ கடந்து மரணங்கள்
பதிவாகியுள்ளன. மேலும், 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 22 பெண்களும், 13 ஆண்களுமாக 35 பேர் மரணமாகினர். 60 வயதுக்கு மேற்பட்ட 65 பெண்களும், 56 ஆண்களுமாக 121 பேர் உயிரிழந்தனர். இதன்படி, 87 பெண்களும், 69 ஆண்களுமாக 156 பேர் நேற்று முன்தினம் மட்டும் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
———–
Reported by : Sisil.L