இலங்கையில் மேலும் 144 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
77 ஆண்களினதும், 67 பெண்களினதும் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன. 30 வயதுக்குட்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 16 ஆண்களும், 5 பெண்களுமாகமொத்தமாக 21 பேர் மரணித்தனர்.
60 வயதுக்கு மேற்பட்ட 122 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவர்களில்
61 ஆண்களும், 61 பெண்களும் அடங்குகின்றனர் என்று அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கையில் இதுவரை கொரோனாத் தொற்றால் மரணித்தோ
ரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 296 ஆக உயர்வடைந்துள்ளது.
—————
Reported by : Sisil.L