இலங்கையில் தேங்காய் எண்ணெய் மாஃபியா உருவாகியுள்ளது என தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ கூறினார்.
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அனுப்பப்பட்ட போதிலும் அது இற்றைவரை அங்கீகரிக்கப்படவில்லை என்பதுடன் மூலப்பொருள் பிரச்சினையால் உள்ளூர் பாரம்பரிய தேங்காய் எண்ணெய் கைத்தொழில் முற்றிலும் வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
வரிகளைக் குறைத்த பின் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
——————
Reported by : Sisil.L