இலங்கையில் டெல்டா கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 117 ஆக அதிகரித்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு, செல் உயிரியல் நிறுவனத்தின் மருத்துவர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இச்சோதனைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கொவிட் பாதிக்கப்பட்டோரின் மாதிரிகளிலிருந்து எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.