நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.நேற்றுமுன்தினம் 189 பேர் கொரோனாத் தொற்றால் மரணமடைந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும் 93 பெண்களும் அடங்குகின்றனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
——————–
Reported by : Sisil.L