பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்கள் இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தமது கரிசனையினை கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமர் வேட்பாளர்களில் ஒருவரான Liz Truss வௌிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலுக்கு முன்னதாக, பிரித்தானியாவின் பிரதமர் வேட்பாளரும் தற்போதைய வெளிவிவகார செயலாளருமான Liz Truss, பிரித்தானியாவில் வாழும் இலங்கை வம்சாவளி தமிழ் மக்களுடன் கலந்துரையாடி இலங்கையில் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான தனது கரிசனையை ளெியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் நல்லிணக்கம், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் உறுதியாக முன்நிற்பதாக Liz Truss தெரிவித்துள்ளார்.
Reported by :Maria.S