இலங்கைப் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு சீனாவின் நோபல் பரிசு

இலங்கையின் பேராசிரியர் மலிக் பீரிஸுக்கு 2021ஆம் ஆண்டுக்கான எதிர்கால அறிவியல் பரிசு (Future Science) இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் மலிக் பீரிஸ் மற்றும் சீனப் பேராசிரியர் யென் க்வொக்-யங்கிற்கு இந்த ஆண்டுக்கான பரிசு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.2003 ஆம் ஆண்டில் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் தொடர்பில் பேராசிரியர் யென் க்வொக்-யங் உடன் இணைந்து அவர் மேற்கொண்ட ஆய்வுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், இது சீனாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *