இலங்கைக் கலைஞர்களின் திறமைகளுக்கு மதிப்பளித்து தமிழகத்தில் தயாராகும் திரைப்படங்களில் வாய்ப்பளிக்கும் நடைமுறை அண்மைக்காலங் களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அவ்வாறே சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பாடல் ஒன்றுக்கு இலங்கையிலிருந்து பிரபலமான நாதஸ்வரக் கலைஞர் பஞ்சமூர்த்தி குமரன் அழைக்கப்பட்டு இசைக்கோர்ப்பில் பங்கேற்றுவிட்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார்.
எமது கலைத்துறைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்த அவரது இந்தச் சிறப்பை கௌரவிக்கும் முகமாக ந எம்.ரி.வி புகைப்பட கலைஞர் சங்கம், அவருக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்து கௌரவித்தது.
Reported by : Sisil.L